Radio Information
சக்தி பண்பலை (Shakthi FM) ஒளிபரப்பு கேப்பிடல் மகாராஜா நிறுவனத்தால் 20 நவம்பர் 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வானொலி சேவை ஆகும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தேவைக்கேற்ப பொழுதுபோக்கு, சமயம், அரசியல், கல்வி, செய்திகள் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை இது 24 மணிநேரமும் ஒளிபரப்புகிறது. மேலும் வாரக் கடைசியில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. கொழும்பு மற்றும் கிழக்குப் பகுதிகளில்; 105.1 மெகாஹெர்ட்சிலும் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி பகுதிகளிலும் 91.5 மெகாஹெர்ட்சிலும் ஒலிபரப்பு செய்கிறது.1998 இதன் ஆரம்ப அறிவிப்பாளர்களில் சின்னத்துரை எழில்வேந்தன் ,வாமலோஷன் ,எஸ்.ஜே .ராம்பிரசன்,ஜானு செல்லத்துரை ,ஜீவா ,கௌரிஷங்கர் ஆகியோர் கடமையாற்றினர் .