TV Information
ஐபிசி தமிழ் என்பது ஈழத்து புலம்பெயர்ந்த மக்களுக்கான 24 மணி நேர தொலைக்காட்சி சேவை ஆகும். இது ஏப்ரல் 2015 இல் லண்டனில் ஒரு சம்பிரதாய நிகழ்வில் தொடங்கப்பட்டது. முக்கிய ஊடகவியலாளர்கள், பிரபலங்கள் மற்றும் தமிழ் சமூகத்தின் முன்னணி கலைஞர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த தொலைக்காட்சியில் பல நினைவு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள், இந்திய மற்றும் ஈழத்து புலம்பெயர்ந்த பிரபலங்களின் நேர்காணல்கள், தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற பல வகையான நிகழ்ச்சிகளை தயாரித்து மற்றும் ஒளிபரப்பு செய்து வருகிறது.