TV Information
நியூஸ் ஜெ என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி அலைவரிசையாக நவம்பர் 14, 2018 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது மறைந்த அஇஅதிமுக தலைவரான ஜெ. ஜெயலலிதாவின் 'ஜெ' என்ற பெயரை வைத்து உருவாக்கப்பட்டது.